சென்னை: அம்பத்தூர் அடுத்த பட்டறைவாக்கத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் என்வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்வரும் இரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கசிவு காரணமாக இருவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து சக ஊழியர்கள் தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது இருவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டனர். அதன்பின் அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் அங்கு விரைந்து போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தென் மண்டல கவுன்சில் கூட்டம்... இம்முறை ஸ்டாலின் பங்கேற்பார்