ETV Bharat / city

தற்கொலை செய்யலாமென்று அழைத்த காதலியைக் கொலை செய்த காதலன் கைது! - சென்னை காவல்துறை

சென்னை: திருவல்லிக்கேணி லாட்ஜில் தற்கொலை செய்ய வந்த காதலர்களில், திடீர் மனம் மாறிய காதலன் காதலியைக் கொலை செய்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலி கொலை
author img

By

Published : Jul 11, 2019, 8:40 PM IST

சென்னை சௌகார்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமர் சிங்(22), காஜல்(18) இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 10ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தற்கொலைக்கு முயன்றதில் காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, காதலன் சுமர் சிங் உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். காஜல் தற்கொலைப் பற்றி சுமர் சிங்கிடம் பெற்ற தகவலில் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. மேலும் இறந்துபோன காஜலின் உடற்கூறு ஆய்வறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்ததையடுத்து, சுமர்சிங் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுமார் சிங்கும், காஜலும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காஜல் வீட்டில் அவருக்கு வேறு ஒருவருடன் கடந்த மூன்று மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத காஜல், நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என பலமுறை சுமர் சிங்கிடம் கூறியுள்ளார். இதில் துளியும் விருப்பம் இல்லாத சுமர் சிங், காதலி வற்புறுத்தியதால், சயனைட் வாங்க முயன்று, தான் ஒரு தங்க நகை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கத்தை கரைப்பதற்காக சயனைட் தேவைப்படுவதாக என பொய் சொல்லி சுமார் அரை கிலோ சயனைட் வாங்கினார்.

18 year old girl murdered case
சுமர் சிங்

பின்னர் திட்டப்படி இருவரும் கடந்த மாதம் 10ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி குளிர்பானத்தில் சயனைட்டை கலந்து இருவரும் குடிக்க முடிவு செய்து, அதில் காதலி காஜல் மட்டும் முழுவதுமாக குடித்துள்ளார்.

ஆனால் சுமர் சிங் குடிப்பது போல நடித்து குடிக்காமல் இருந்துள்ளார். இதனை கவனித்த காஜல் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் சயனைடைக் குடித்ததால் காஜலுக்கு உடல் விட்டு விட்டு இழுத்துள்ளது, இதனால் பயந்து போன சுமர் காஜல் உயிர் பிழைத்துவிட்டால் மீண்டும் தம்மை தற்கொலை செய்து கொள்ள கூறி முயற்சிப்பார் எனக் கருதி, துப்பட்டாவால் காஜல் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து காதலியை கொலை செய்த குற்றத்துக்காக சுமர் சிங் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காதலர்கள் தங்கியிருந்த லாட்ஜ்

Intro:Body:திருவல்லிக்கேணியில் லாட்ஜில் காதலி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!*

*சென்னையில் ஆன்லைன் மூலம் சயனைடு குப்பிகள் வாங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலி உயிரிழந்தார், ஒரு மாதத்திற்கு பின்னர் காதலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்*

சென்னை சவுகார்ப்பேட்டை பகுதியை சார்ந்த சுமர் சிங்,காஜல் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் கடந்த மாதம் 10 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி உள்ள தனியார் விடுதியில் இருவரும் தற்கொலைக்கு முயன்றதில் காதலி காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

காதலன் சுமார் சிங் ஆபத்தான கட்டத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

காதலனிடம் பெற்ற சில தகவலில் அவர் முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இறந்துபோன காதலி‌ காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் காதலன் சுமர்சிஙகிடம் தீவிர விசாரணை நடத்தினர்

சவுகார்பேட்டையைச் சேர்ந்த சுமார் சிங்கும் காஜலும் கடந்த 3 வருட காலமாக காதலித்து வந்துள்ளனர் . ஆனால் காஜல் வீட்டில் காஜலுக்கு வேறு ஒருவருடன் கடந்த மூன்று மாதங்கள் முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது

இதனை பிடிக்காத காதலி காஜல் நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என பலமுறை காதலன் சுமர் சிங்கிடம் கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதில் சுமர் சிங்குக்கு விருப்பமில்லை தொடர்ந்து காதலி காஜல் வற்புறுத்தியதால் ஆன்லைன் மூலம் சுமார் அரை கிலோ சயனைட் வாங்கியுள்ளார்.

ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட மருத்துவ கம்பெனியை, தாம் தங்கநகை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கத்தை கரைப்பதற்காக சயனைட் தேவைப்படுவதாகக் கூறி மருந்து கம்பெனியை நம்ப வைத்துள்ளார்

பின்னர் கடந்த மாதம் பத்தாம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர் திட்டப்படி இருவரும் குளிர்பானத்தில் சயனைட்டை கலந்து குடிக்க முடிவு செய்து காதலி காஜல் முழுவதுமாக குடித்துள்ளார்

ஏற்கனவே தற்கொலை செய்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்ததால் சயனைட் கலந்த குளிர்பானத்தை குடிப்பது போல நடித்து குடிக்காமல் இருந்துள்ளார் சுமர்சிங்.

இதனை கவனித்த காதலி இது பற்றி கேட்கும் பொழுதே சயனைட் குடித்ததால் காஜலுக்கு உடல் வெட்டி வெட்டி இழுத்துள்ளது, இதனால் பயந்துபோன சுமர்சிங் இவள் உயிர் பிழைத்து விட்டால் மீண்டும் தம்மை தற்கொலை செய்து கொள்ள கூறி முயற்சிப்பார் எனக்கூறி துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்தாக போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்

இதையடுத்து காதலியை கொலை செய்த குற்றத்துக்காக திருவல்லிக்கேணி போலீசார் சுமர் சிங்கை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.