ETV Bharat / city

15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி - ஒரு லட்சம் இலக்கு - Tamilnadu vaccination camp

இன்றே 15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணியில் ஒரு லட்சம் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி- ஒரு லட்சம் இலக்கு

author img

By

Published : Jan 8, 2022, 6:33 PM IST

சென்னை: 15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணியில் ஒரு லட்சம் என்ற இலக்கை சென்னையில் இன்று அடைந்துவிடுவோம் என இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. எவர்ட் பள்ளியில் 15 முதல் 18 வயதினருக்கான கோவிட் தடுப்பூசி போடும் முகாமினை சேகர்பாபு தொடங்கிவைத்தார். அதனையடுத்து பேசிய சேகர்பாபு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கிடையாது. அதில் ஏதும் மாற்றமில்லை எனத் தெரிவித்தார்.

தடுப்பூசியால் தடுக்கப்பட்ட உயிரிழப்பு

தொடர்ந்து பேசிய சேகர்பாபு, "மூன்றாம் அலை நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு 15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைத்தார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் கோவிட் தொற்றுக்கு இழக்கப்பட்டுவந்த நிலையில் அதனை முதலமைச்சர் தனது சீரிய முயற்சியால் குறைத்தார்.

சென்னையில் தடுப்பூசியை மக்கள் அதிகம் எடுத்துக்கொண்ட காரணத்தால் தற்போது கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும் அதனால் உயிர்ப்பலி என்பது பெரிய அளவில் இல்லாமல் உள்ளது" எனக் கூறினார்.

சென்னை முதலிடம்

92 விழுக்காடு மக்கள் சென்னையில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும் 71 விழுக்காடு பேர் சென்னையில் இரண்டாம் தவணை போட்டுக்கொண்டுள்ளனர் எனவும் 3.11 லட்சம் பேருக்குச் சென்னையில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்துவதில் சென்னை மாநகராட்சிதான் முதல் இடத்தில் உள்ளது. முந்தைய காலங்களில் கோவிட் தொற்று தடுப்பைப் பொறுத்தவரை கேரளாவை எடுத்துக்காட்டாகச் சொல்லிவந்தார்கள். இப்போது ஸ்டாலினை எடுத்துக்காட்டாகச் சொல்லிவருகிறார்கள் என்று கூறினார்.

கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு வார காலத்தில் சென்னை மாநகரில் அதிக அளவில் கோவிட் தொற்று பரவியுள்ளது.

நீட் மசோதா - பாஜக வெளிநடப்பு

நீட் மசோதா பற்றிய அனைத்துக் கட்சி கூட்டத்திலிருந்து இன்று பாஜக வெளிநடப்புச் செய்தது பற்றிய கேள்விக்கு, "தமிழ்நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் நீட் எதிர்ப்பு மசோதாவை ஆதரிக்க வேண்டும். சட்டப்பேரவையில் செய்ததைத்தான் பாஜக இன்றும் செய்துள்ளது" என்று கூறினார்.

நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், சென்னை வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.