சென்னை: பல்லாவரம் சந்தை சாலையில், பரங்கிமலை - பல்லாவரம் கண்டோன்மெண்ட் கழகத்திற்கு சொந்தமான இடத்தில், சுமார் 15 கடைகள் உள்ளன. இங்கு கடை நடத்தி வந்தவர்கள், கடந்த 35 ஆண்டுகளாக மாத வாடகை அடிப்படையில், ஆண்டுக்கு ஒரு முறை, ஒரே தவணையாக வாடகை செலுத்தி கடைகளை நடத்தி வந்தனர்.
அங்கு பெயிண்டர், வெல்டர், இருசக்கர மெக்கானிக், ஜெராக்ஸ் கடை, ஆட்டோ வியாபாரம் போன்ற கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில், அந்தக் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கண்டோண்மென்ட் கழக நிர்வாகத்தால் நோட்டீஸ் அனுப்பட்டது. கடைகளை காலி செய்ய கண்டோன்மென்ட் அறிவித்த காலகெடு முடிந்த நிலையில், நேற்று(டிச.,24) காவல்துறையின் உதவியுடன் கண்டோன்மென்ட் அலுலலர்கள் 15 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
இதனால் இந்த கடைகளை நம்பி வாழ்ந்த கடை நடத்தி வந்தவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என, 100கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடகையை உயர்த்தினாலும் பரவாயில்லை கடைகளை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் கடை நடத்தி வந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற ஆறு பேர் கைது!