செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையாவூர் உள்ளிட்ட 14 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 69 ஏரிகளில் 75 விழுக்காடு நீர் நிரம்பியுள்ளது. 109 ஏரிகளில் 50 விழுக்காட்டுக்கு மேல் நீர் நிரம்பியுள்ளது.
இன்றும் மழை பெய்து வருவதால் மேலும் பல ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. செம்பரபாக்கம் ஏரி 24 அடி உயரம் கொண்டது, இதில் தற்போது வரை 20.70 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. செம்பரபாக்கம் ஏரி நிரம்புவதால் சென்னை மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.