ETV Bharat / city

'இந்த மாசத்துக்கு இது போதும்' -ரேசனில் 14 பொருள்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்கள்

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்க 14 மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

'இந்த மாசத்துக்கு இது போதும்' -ரேசனில் 14 பொருள்கள்

author img

By

Published : Jun 3, 2021, 2:26 PM IST

Updated : Jun 3, 2021, 4:49 PM IST

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட காலம் (50 ஆண்டுகள்) தலைவராக இருந்தவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்தப் பிறந்தநாளை திமுகவினர் வெகுவிமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.

ரேசனில் 14 பொருள்கள்
ரேசனில் 14 பொருள்கள்

இதையடுத்து தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர் குடும்பத்தினருக்கு நிதி வழங்கும் திட்டம், 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், கரோனா நிவாரண நிதி 2ஆவது தவணை வழங்கும் திட்டம், கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம் உள்ளிட்ட 5 நலத் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்தில்,

  1. சர்க்கரை- 500 கிராம்
  2. கோதுமை – 1 கிலோ
  3. உப்பு- 1 கிலோ
  4. ரவை- 1 கிலோ
  5. உளுத்தம் பருப்பு- 500 கிராம்
  6. புளி- 250 கிராம்
  7. கடலை பருப்பு- 250 கிராம்
  8. டீ தூள் -200கிராம்
  9. கடுகு- 100 கிராம்
  10. சீரகம்- 100 கிராம்
  11. மஞ்சள் தூள்- 100 கிராம்
  12. மிளகாய் தூள்- 100 கிராம்
  13. குளியல் சோப்பு 25 கிராம் – 1
  14. துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1

ஆகிய பொருள்கள் அடங்கும்.

கருணாநிதியின் பிறந்தநாள் பரிசு

முன்னதாக, இன்று (ஜூன். 3) காலை சென்னை மெரினா கடற்கரை, அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று கருணாநிதியின் புகைப்படத்திற்கு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மெரினா கடற்கரையில் மெரினா தமிழ்நாட்டில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

Last Updated : Jun 3, 2021, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.