ETV Bharat / city

இன்று முதல் மளிகை பொருள்கள் விநியோகம் - Groceries issuance from today

இன்று முதல் ரேஷன்கடைகளில் கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை விநியோகம் செய்யப்படுகிறது. 14 மளிகை பொருள்களுக்கான சிறப்பு தொகுப்பும் இன்று வழங்கப்படுகிறது.

இன்று முதல் மளிகை பொருள்கள் விநியோகம்
இன்று முதல் மளிகை பொருள்கள் விநியோகம்
author img

By

Published : Jun 15, 2021, 7:50 AM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்கான டோக்கன்கள் ஜூன் 11ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது. கரோனா பரவல் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களே வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகம் செய்தனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்தில்,

  1. சர்க்கரை- 500 கிராம்
  2. கோதுமை – 1 கிலோ
  3. உப்பு- 1 கிலோ
  4. ரவை- 1 கிலோ
  5. உளுத்தம் பருப்பு- 500 கிராம்
  6. புளி- 250 கிராம்
  7. கடலை பருப்பு- 250 கிராம்
  8. டீ தூள் -200கிராம்
  9. கடுகு- 100 கிராம்
  10. சீரகம்- 100 கிராம்
  11. மஞ்சள் தூள்- 100 கிராம்
  12. மிளகாய் தூள்- 100 கிராம்
  13. குளியல் சோப்பு 25 கிராம் – 1
  14. துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1

ஆகிய பொருள்கள் அடங்கும். மேலும் கரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணையான 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன்களும் விநியோகம் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் டோக்கன் பெற்ற அனைவரும் இன்று முதல் மளிகை பொருள்களையும், கரோனா இரண்டாவது தவணையையும் பெற்றுக்கொள்ளலாம். அப்போது ரேஷன் கடைகளில் அரசின் கரோனா விதிமுறைகளை கடைப்படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.