சென்னை அடுத்த பழைய பல்லாவரம் புதுதெருவை சேர்ந்தவர் தணிகைவேல். இவர் டெய்லராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சாய்ராம் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் விக்னேஷ் (18) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், விக்னேஷ் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் திருநீர்மலை பெருமாள் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, விக்னேஷ் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், இரண்டு மணி நேர தேடுதலுக்கு பிறகு உயிரிழந்த நிலையில் சடலமாக விக்னேஷ் உடலை மீட்டனர்.
இதுதொடர்பாக சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.