சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக, 50 வட்டாரங்களில் உள்ள ஆயிரத்து,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் தொடங்கப்பட்டது.
3 மண்டலங்களில்..
இந்தத் திட்டம் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி என தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தின் பிற கிராம, நகர்ப்புற பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.
இத்திட்டம் தொடங்கப்பட்டு ஆக. 17ஆம் தேதிவரை,
- உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் 58 ஆயிரத்து,341 நபர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ளவர்களுள் 36,775 பேரும்
- உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுள் 25 ஆயிரத்து,787 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
- மேலும், மூன்றாயிரத்து,715 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும்,
- மூன்றாயிரத்து,725 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது.
- இதைத் தவிர்த்து 18 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ஒரு லட்சத்து,28 ஆயிரத்து,361 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'டெங்கு, சிக்குன்குனியாவை கட்டுப்படுத்தக்கோரி வழக்கு!'