ETV Bharat / city

கொப்பரை தேங்காய் விலை உயர்த்தப்படுமா? - வேளாண்மைத்துறை அமைச்சர் விளக்கம் - சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழ்நாட்டில் 2022 ஆண்டு 1,232 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டபேரவையில் தெரிவித்தார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
author img

By

Published : Apr 12, 2022, 11:06 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.12) பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், கோவி.செழியன், அண்ணாதுரை, அசோக்குமார், மற்றும் வேல்முருகன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த வேண்டும் என்றும் கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

கொப்பரைத் தேங்காய்கள் கொள்முதல்: இதற்குப் பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் கொப்பரை தேங்காய்க்கான கொள்முதல் நிலையங்கள் மக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு கொப்பரை தேங்காய் ரூ.105-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில், 2019ஆம் ஆண்டில் 310 மெட்ரிக் டன்னும், 2020ஆம் ஆண்டில் 43 மெட்ரிக் டன்னும் 2021ஆம் ஆண்டில் 29 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், திமுக ஆட்சியில் பொறுப்பேற்று 2022ஆம் ஆண்டில் 1,232 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பொள்ளாச்சியிலும் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டு நேற்று (ஏப்.11) முதல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை தேங்காய் விலை கண்டிப்பாக உயர்த்தப்படும். நிச்சயமாக விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் மையம் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.