இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் 72 ஆயிரத்து 122 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஒரு கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 37 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் மூலம், 7 லட்சத்து 97 ஆயிரத்து 693 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தற்போது 10, 208 நபர்கள் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஆயிரத்து 296 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 75 ஆயிரத்து 602ஆக உயர்ந்துள்ளது.
இன்று 13 பேர் உயிரிழந்ததையடுத்து இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 883ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 226 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 2,19,526
கோயம்புத்தூர் - 50317
செங்கல்பட்டு - 48647
திருவள்ளூர் - 41709
சேலம் - 30709
காஞ்சிபுரம் - 28117
கடலூர் - 24420
மதுரை - 20089
வேலூர் - 19771
திருவண்ணாமலை - 18881
தேனி - 16722
தஞ்சாவூர் - 16706
விருதுநகர் - 16104
தூத்துக்குடி - 15853
கன்னியாகுமரி - 15975
ராணிப்பேட்டை - 15748
திருநெல்வேலி - 15041
விழுப்புரம் - 14770
திருப்பூர் - 16142
திருச்சிராப்பள்ளி - 13730
ஈரோடு - 13007
புதுக்கோட்டை - 11260
கள்ளக்குறிச்சி - 10726
திண்டுக்கல் - 10583
திருவாரூர் - 10663
நாமக்கல் - 10750
தென்காசி - 8163
நாகப்பட்டினம் - 7859
திருப்பத்தூர் - 7342
நீலகிரி - 7662
கிருஷ்ணகிரி - 7619
ராமநாதபுரம் - 6255
சிவகங்கை - 6407
தருமபுரி - 6225
அரியலூர் - 4606
கரூர் - 4969
பெரம்பலூர் - 2250