புரெவி புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக தூத்துக்குடி, திருச்சி, கொச்சி விமானங்கள் ரத்தாகின. இந்நிலையில் இன்று (டிச. 04) திருச்சி விமானம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் மூன்று விமானங்கள், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் மூன்று விமானங்கள், சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு மதுரை சென்றுவிட்டு, மதுரையிலிருந்து பகல் 12.15 மணிக்கு சென்னைக்கு வரும் இரண்டு விமானங்கள், பகல் 11.30 மணிக்கு கொச்சிக்குப் போய்விட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னைக்கு வரும் இரண்டு விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே சென்னையிலும் பலத்த மழை பெய்துகொண்டிருப்பதால் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாகப் புறப்படுகின்றன.
குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை, கொல்கத்தா, புனே, புவனேஸ்வா், அகமதாபாத், திருச்சி, துபாய், அபுதாபி ஆகிய எட்டு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
இதையும் படிங்க: 54 நாள்கள் பரோல் முடிவுற்றது: சிறைக்குத் திரும்பும் பேரறிவாளன்