சென்னை: முதலமைச்சரின் குறைதீர் திட்டத்திற்கும், அம்மா அழைப்பு மைய எண்ணான 1100 எண்ணே பயன்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள ஆணையில், "கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 உடன் தமிழ்நாடு பொதுமக்களின் குறைகளை நிவர்த்திசெய்ய சென்னையில் அம்மா அழைப்புதவி மையங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொது குறை தீர்க்கும் முதலமைச்சர் ஹெல்ப்லைன் மேலாண்மை அமைப்பு அமைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஐ.ஐ.பி.ஜி.சி.எம்.எஸ். 100 இருக்கைகள் கொண்ட முதல்வர் ஹெல்ப்லைன் அழைப்பு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த மேலாண்மை மையத்தை பொதுமக்கள் தொடர்புகொள்ளும் வகையில், பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் எண் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் முதலமைச்சரின் குறைதீர் மேலாண்மை மையத்திற்கும் 1100 என்ற அம்மா அழைப்பு மைய எண்ணைப் பயன்படுத்தலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்பதில்லை - கே.என். நேரு