2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல் நாளான இன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வில் காப்பியடித்த 11 மாணவர்கள் தேர்வுத்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட 11 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
12ஆம் வகுப்பு பழைய பாடத் திட்டத்தில் தனித் தேர்வர்களாக தேர்வெழுதிய நான்கு மாணவர்கள் வேலூர் மாவட்டத்திலும், சென்னை மாவட்டத்தில் 7 மாணவர்களும் என மொத்தம் 11 மாணவர்கள் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’தமிழ் தேர்வு எளிதாக இருந்தது’ - 12ஆம் வகுப்பு மாணவிகள் மகிழ்ச்சி