ETV Bharat / city

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! அதிரடி காட்டும் அரசு!

author img

By

Published : Feb 26, 2021, 3:59 PM IST

Updated : Feb 26, 2021, 5:19 PM IST

vanniyar reservation 10 percentage
vanniyar reservation 10 percentage

15:55 February 26

சென்னை: அரசு கல்வி நிலையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

அதேபோல் சீர் மரபினருக்கு 7% தனி இட ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. குறிப்பாக, எம்.பி.சி - வி என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு, 10.5 % உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. 

எம்.பி.சியில் உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%ம், சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடும் வழங்கப்பட உள்ளது. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதரப் பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது.  

அதேபோல், இந்த 7% உள் ஒதுக்கீட்டை சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் பெற்று பயனடையவுள்ளன. தமிழ்நாட்டில் மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடாகும். அதில் பிற்படுத்தப்பட்டோர் 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20%, பட்டியலினத்தவர் - 19% என இட ஒதுக்கீடு தரப்படுகிறது.  

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'இந்த மாற்றம் தற்காலிகமானது. சாதிகள் குறித்த புள்ளிவிவர சேகரிப்புக்குப் பின் 6 மாதங்கள் கழித்து மாற்றியமைக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 26, 2021, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.