சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. ஆனால் மாணவர்களுக்கு முழுப்பாடத்திட்டத்தையும் நடத்தி முடிக்க போதுமான காலம் இல்லாததால் முக்கிய பகுதிகள் தவிர மற்ற பாடங்களை பள்ளிக்கல்வித்துறை குறைத்தது.
அதனடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதத்தில் நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கான வினாக்கள் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமைப் பாடத்திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ள பாடங்கள் முழுவதிலும் இருந்தும் கேட்கப்படும். இந்த பாடத்திட்டங்கள் அரசுத் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காட்டுமன்னார்கோவில் அரசு கல்லூரி மாற்று இடத்தில் கட்ட கூடுதல் நிதி தேவை: சிந்தனை செல்வன்