ETV Bharat / business

Insurance Policy: அலுவலக ஊழியர்கள் டாப்-அப் பாலிசி எடுப்பது அவசியமா? - ரெக்கரிங் டெபாசிட்டை

குழந்தைகளுக்காக முதலீடு செய்யும்போது, கல்வி பணவீக்கத்தை கருத்தில் கொண்டு லாபகரமான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அத்துடன் குழந்தைகளுக்கு டேர்ம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது சிறந்தது. நிறுவனத்தின் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கும் ஊழியர்கள், முதன்மையாக மற்றொரு பாலிசியை எடுப்பது நல்லது.

New insurance
குரூப் ஹெல்த்
author img

By

Published : Jun 28, 2023, 12:32 PM IST

தெலங்கானா: இன்சூரன்ஸை எதிர்கால பாதுகாப்பாக பார்ப்பவர்களும் உண்டு, முதலீடாக பார்ப்பவர்களும் உண்டு. கரோனா காலத்திற்குப் பிறகு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் இன்சூரன்ஸில் முதலீடு செய்கின்றனர். இந்த சூழலில் வழக்கமான இன்சூரன்ஸ் பாலிசி குறித்த சில கேள்விகளுக்கு நிபுணர்களின் பதிலை காணலாம்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு, நிறுவனம் சார்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் (Group health insurance) வழங்கப்படுகிறது. இந்த சூழலில், அந்த ஊழியர் மற்றொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டுமா அல்லது டாப் அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டுமா?

நிறுவனம் சார்பில் வழங்கப்படும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை முதன்மையான பாலிசியாக பார்க்க முடியாது. இந்த குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படுவதால், வேலையில் இருக்கும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இதனை முழுமையான பாதுகாப்பாக கருத முடியாது. எனவே, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாசிலி வைத்திருக்கும் ஊழியர்கள், அவர்களுக்கென தனியான ஒரு பாலிசியை எடுத்துக் கொள்வது சிறந்தது. முடிந்தால் அதில், டாப் அப் பாலிசி எடுக்க முயற்சி செய்யலாம். நிறுவனம் வழங்கும் குரூப் பாலிசியை கூடுதலாக வைத்துக் கொள்ளலாம்.

மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் 45 வயதுடைய நபர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். இப்போது அவர் 50 லட்சம் ரூபாய்க்கு வேறொரு பாலிசி எடுக்கலாமா?

பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரரின் வயதைப் பொறுத்து, ஆண்டு வருமானத்தில் 10 முதல் 12 மடங்கு வரையில் கவரேஜை வழங்குகின்றன. அதன்படி பார்த்தால், அந்த நபர் 50 லட்சம் ரூபாய்க்கு மற்றொரு பாலிசி எடுப்பதில் சிக்கல் இல்லை. புதிய பாலிசி எடுக்கும்போது பழைய பாலிசியின் விவரங்கள், வருமானம், நோய் தாக்குதல் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். பிரீமியம் ரீ பண்ட் (Premium Refund) பாலிசிகள் விலை உயர்ந்தவை என்பதால், வழக்கமான டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது. காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்கும் நிறுவனத்திடம் பாலிசி எடுக்க வேண்டும்.

ஒரு பெற்றோர் தங்களது பத்து வயது குழந்தைக்கு எதிர்கால பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதற்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்றால், பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய பொருத்தமான திட்டம் எது? எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்?

தற்போது கல்வி பணவீக்கம் (Education inflation) அதிகமாக உள்ளது. கல்விக்கான செலவுகள் அதிகரிப்பதே கல்வி பணவீக்கம் என்று கூறப்படுகிறது. இந்த கல்வி பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அதனை சமாளிக்க எங்கு முதலீடு செய்தாலும் வருவாய் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது போன்ற சூழலில் பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். அதில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆண்டுகளுக்கு சராசரியாக 12 சதவீத லாபத்துடன் முதலீடு செய்தால், அது சுமார் 31.5 லட்சம் ரூபாயாக முதிர்ச்சியடையும். அதேபோல், குழந்தைகளுக்காக முதலீடு செய்யும்போது, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டேர்ம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்.

ஒரு குடும்பம் இரண்டு ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெற விரும்புகிறது. அதற்கு மாதம் 80 ஆயிரம் ரூபாய் செலுத்தத் தயாராக உள்ளது. இவர்களுக்கு எந்த வகை திட்டம் சரியாக இருக்கும்?

இரண்டு ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் அபாயகரமான திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது. முதலீடு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டைத் (Recurring Deposit) தேர்ந்தெடுப்பது நல்லது. வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் காப்பீடு எடுப்பதை மறந்துவிடக் கூடாது.

மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய விரும்பும் ஒரு சிறு வணிகர், பொது வருங்கால வைப்பு நிதி, தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றை தேர்வு செய்யலாமா?

பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்யும்போது, நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். 5 ஆயிரத்தில் 3 ஆயிரத்தை பொது வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யலாம். மீதமுள்ள 2 ஆயிரத்தை டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் டெபாசிட் செய்யலாம். இப்படி 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், சராசரியாக 10 சதவீத லாபத்துடன் சுமார் 19 லட்சம் ரூபாயை பெற முடியும்.

இதையும் படிங்க: மகிழ்ச்சியான ஓய்வுபெற முதலீடு செய்யுங்கள் - தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்(NPS) உதவியோடு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.