சென்னை: தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான அணிகலன் ஆகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. வீட்டில் எவ்வளவு நகைகள் இருந்தாலும், பெண்களுக்கு, தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து உள்ளது. மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்க வங்கிகள் திவாலானதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்வை சந்தித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,625க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,808க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.00 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,500 ஆக இருக்கிறது.
கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல். HUID என்ற 6 இலக்க எண் எழுத்து அடிப்படையிலான, ஹால்மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தங்கத்தின் விலை, தொடர்ந்து ஏற்றம் பெற்று வந்தது. இதனிடையே, இன்று ( மே 25) தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 320 சரிவடைந்து உள்ள நிகழ்வு, நகைப் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதோடு மட்டுமல்லாது, அவர்களை நகைக் கடைகளை நோக்கி படை எடுக்கவும் வைத்து உள்ளது என்று கூறினால், அது மிகை அல்ல!
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில் வைகாசி வசந்த உற்சவ புகைப்படத்தொகுப்பு!