ETV Bharat / business

திடீரென எகிறிய தங்கம் விலை... சவரனுக்கு 40 ரூபாய் அதிகரிப்பு!! - chennai news

Gold rate today in chennai: கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 43,840க்கு விற்பனை செய்யப்படுகிறது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:46 PM IST

சென்னை: இன்று (ஆகஸ்ட் 26) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 43,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.40 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்தே தினமும் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டு வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5% முதல் 2% வரை குறைந்துள்ளது. மே மாதத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்தது. அத்துடன் ஓப்பிடுகையில், இம்மாதத்தில் தங்கத்தின் விலை மே மாதத்தை விட சுமார் 5% வரை குறைந்துள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றமின்றி விற்பனை ஆகி வருகிறது.

அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தை உயத்தி வருகிறது. அமெரிக்காவில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் அமெரிக்க டாலர் நிகராக, தங்கம் விலை ஏற்றம் இறக்கம் அடைந்து வருகிறது.

44 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை: மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ரூ.45 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யபட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டாக் கனியாக மாறியிருந்தது.

தற்போது தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக 43,500- 43,600 வரை இருந்து வந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை 44 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று (ஆகஸ்ட் 25) தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.43,800 விற்பனை செய்யப்ட்டது.

இன்றைய நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 26) கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,480க்கும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,840-க்கும் விற்பனையாகின்றன. அதே போல் வெள்ளி கிராமுக்கு ரூ.0.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோ ரூ.80,000 விற்பனை செய்யபடுகின்றன.

தொடர்ந்து சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. இது வரவிருக்கும் நாள்களிலும் தொடருமா இல்லை மீண்டும் தங்கத்தின் விலை உயருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்... ஓபிஎஸ் தொடர் பின்னடைவுக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.