ஏழு நாட்கள் உயர்வைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53.73 புள்ளிகள் குறைந்து 40,248.23 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.10 புள்ளிகள் குறைந்து 11,917.20 எனவும் இன்றைய பங்குச்சந்தையில் வர்த்தகமாகியுள்ளது.
இந்நிலையில் பஜாஜ் பைனான்ஸ், யெஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எஸ்பிஐ போன்ற பங்குகள் அதிக லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் பஜாஜ் ஃபின்செர்வ் 139 புள்ளிகள் உயர்ந்து பங்குதாரர்களை சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் இன்றைய பங்குச்சந்தையில் சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் பஜாஜ் ஃபின்செர்வ் முதலிடம் வகிப்பதால், நாளை தொடங்க இருக்கும் பங்குச்சந்தையில் வாடிக்கையாளர்களின் கவனம் அதன் மீது திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தைகள் திடீர் சரிவு!