நேற்று பங்குச்சந்தை முடிவின் பொது உயர்வை சந்தித்த சென்செக்ஸ், நிஃப்டி இன்றைய தொடக்கத்தில் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு (BSE) எண் சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 38,647.44 மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) குறியீட்டு எண் நிஃப்டி 4 புள்ளிகள் சரிந்து 11,466.30 என தொடங்கியது. மேலும் பங்குச்சந்தை தொடங்கிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே சென்செக்ஸ் உயர்வை தொட்டது.
இந்நிலையில் Q2 காலாண்டில் 45 விழுக்காடு உயர்வை சந்தித்த மயிண்ட்ட்ரீ நிறுவனம் Q3 காலாண்டில் மேலும் நான்கு விழுக்காடு உயர்வை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனம் மையிண்ட் ட்ரீ பங்குகள் மீது திரும்பியுள்ளது. இன்றைய தொடக்கத்தில் மையிண்ட் ட்ரீ (Mindtree) பங்குகள் 17 புள்ளிகள் சரிவை சந்தித்தாலும் முடிவின் போது வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித்தரும் என பங்கு தரகர்கள்(Stock Brokers) தெரிவிக்கின்றனர்.
மேலும் ஜீ என்டர்டெய்ன்மெண்ட்(Zee Entertainment), என்சிசி பைனான்ஸ் (NCC Finance), பஜாஜ் கன்சுமர் (Bajaj Consumer), கோக்ஸ்&கிங்ஸ்(Cox&Kings) பங்குகள் உயர்வை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளின் வருமானம் இருமடங்காக உயரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி