பிட்காயின் குறித்து பலமுறை எச்சரித்த அருண் ஜேட்லி
இந்தியாவில் பொதுவாக பிட்காயின் வர்த்தகம் ஊக்குவிக்கப்படுவதில்லை. இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'பிட்காயின் வர்த்தகம் ஆபத்தானது. அதில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்' என்று பலமுறை எச்சரித்தது நினைவிருக்கலாம்.
இது அபாயகரமான முதலீடு என்ற போதிலும் அதிகப்படியான லாபம் கிடைப்பதால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பிட்காயின் ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி பிட்காயின் உபயோகிப்பது தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஏறுமுகத்திலே இருக்கும் பிட்காயின் வர்த்தகம்
நிலைமை இவ்வாறிருக்க, பிட்காயின் வர்த்தகம் ஏறுமுகமாகவே உள்ளது. அதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. 2018ஆம் ஆண்டு ஒரே வாரத்தில் மட்டும் பிட்காயின் கிரிப்டோகரன்சி ஒன்பதாயிரம் டாலரிலிருந்து பத்தாயிரம் டாலர் மதிப்பு உயர்ந்தது மறுக்கமுடியாத ஒன்று.
பிட்காயினுக்கு எதிராக களமிறங்கிய புதிய கிரிப்டோகரன்சி
இந்நிலையில் பிட்காயினை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மற்றொரு கிாிப்டோகரன்சி வளர்ச்சி பெற்றுவருகிறது. 'டெதர்' என்ற பெயரில் அழைக்கப்படும் அந்தக் கிரிப்டோகரன்சி, ஒரு மில்லியன் வர்த்தகத்தையும் தாண்டி பீடுநடைபோடுவதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் பல்வேறு கிாிப்டோகரன்சிகள் நடைமுறையில் உள்ளது. இதில் நிலையான கிரிப்டோகரன்சி என்று பெயரெடுத்தது பிட்காயின்.
இந்தச் சூழலில், 2014ஆம் ஆண்டு டெதர், சந்தையில் அறிமுகமானது. இது ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
எச்சரிக்கை விடுக்கும் பொருளாதார வல்லுநர்
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், ஒருநாளைக்கு பிட்காயின் 21 பில்லியன் வர்த்தகம் ஆகியுள்ளது. இதனைக் காட்டிலும் டெதர் 18 விழுக்காட்டிற்கும் அதிகப்படியாக வர்த்தகம் ஆகியிருக்கிறது.
மேலும் பலராலும் நிலையான கிாிப்டோகரன்சி என்ற நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய பொருளாதார வல்லுநர் ஒருவர், 'சந்தையில் உத்தரவாதம் கொடுக்கமுடியாது; அது நிலையற்றது. அபாயங்களுக்கு உள்பட்டது' என்று எச்சரிக்கைவிடுக்கிறார்.