கடந்த இரண்டு நாட்களாக பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துவந்த நிலையில், இன்று மதிய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை 180 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 36 ஆயிரத்து 572 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 180 புள்ளிகள் அதிகரித்து 36 ஆயிரத்து 752 புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 843 புள்ளிகளாக வர்த்தகமாகிவருகிறது.