இந்திய பங்குச் சந்தைகளை பொறுத்தமட்டில் வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் வர்த்தகம் ஆகின. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 336 புள்ளிகள் இழப்பை சந்தித்தது.
தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ., நிப்டி 95.10 புள்ளிகள் சரிவை சந்தித்து 12,056.05 என வர்த்தகம் நிறைவுற்றது. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 40,793.81 புள்ளிகள் என வர்த்தகம் ஆனது.
எதிர்பாராத வகையில் வங்கி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அந்த வகையில், தனியார் வங்கியான யெஸ் பேங்க் 2.50 சதவீதமும், பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. பங்குகள் 2.03 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.97 சதவீதமும் சரிவை சந்தித்தது.
இருப்பினும் பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வைக் கண்டன.
இதையும் படிங்க : 'ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்காவிட்டால், மூட வேண்டிய நிலை வரும்' - மத்திய அமைச்சர் தகவல்!