இன்றைய வணிக நிகழ்வுகளில் முக்கியமானதாக முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் தலைவர் பொறுப்பிலிருந்து சிவ் நாடார் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகளான ரோஷிணி நாடார் தலைவர் பொறுப்பை உடனடியாக ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஹெச்.சி.எல் நிறுவன பங்குகளின் விலை இழப்பை சந்தித்தன.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
பி.பி.சி.எல்., ஒ.என்.ஜி.சி., பார்தி இன்ஃப்ராடெல், கெய்ல், டைடான் கம்பனி போன்ற நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஹிண்டால்கோ, பிரிட்டானியா, டி.சி.எஸ், நெஸ்லே, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனப் பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை நிலவரம்: ஊசலாடிய பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 548.46 புள்ளிகள் அதிகரித்து 37,020.14 புள்ளிகளில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 161.75 புள்ளிகள் உயர்வைக் கண்டு 10,901.70 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாயின் மதிப்பு
நேற்று ரூ.75.19 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.75.02 காசுகளாக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை
பொருள் (கமாடிட்டி) வணிகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 28 புள்ளிகளை இழந்து 3037 ரூபாயாக இருந்தது.