மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிச.24) சுமார் 529.36 (1.14 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 46,973.54 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 148.15 (1.09 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 13,749.25 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக இந்துஸ்தான் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சுமார் மூன்று விழுக்காடு உயர்வு கண்டன. அதற்கு அடுத்தபடியாக சன் பார்மா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை இன்போசிஸ், இன்டஸ்இன்ட், எச்.சி.எல், நெஸ்லே இந்தியா, டெக் மஹிந்திரா ஆகியவை சரிவைக் கண்டன.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 முடக்கம் அமலுக்கு வருவதால் சந்தைகளில் சுணக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றத்தை சந்தித்துவருவது வர்த்தகர்களிடையே நம்பிக்கை அளித்துள்ளது.
இதையும் படிங்க: 15 கூட்டங்கள், 170 பிரதிநிதிகள்: பட்ஜெட் ஆலோசனையை நிறைவு செய்த நிதியமைச்சர்