மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 250 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. தற்போது மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 283 புள்ளிகள் அதிகரித்து 31,663 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 92 புள்ளிகள் அதிகரித்து 9,279 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகின்றன.
ஏற்றம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடுவரை உயர்ந்துள்ளன. அதைத்தொடர்ந்து டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, டி.சி.எஸ், எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன.
இறக்கம் கண்ட பங்குகள்
மறுபுறம் டைட்டன், எம் & எம், மாருதி, பவர் கிரிட், டெக் மஹிந்திரா, எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
புதன்கிழமை (ஏப்ரல் 22) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1326.09 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் இந்திய பங்குச் சந்தை ஏற்றமடைந்துள்ளன.
சர்வதேச பங்குச் சந்தை
சர்வதேச அளவில் ஹாங்காங், டோக்கியோ, ஷியோல் ஆகிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் நள்ளிரவு வர்த்தகம் இரண்டு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. அதே நேரம் ஷாங்காய் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய்யின் விலை 3.15 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 21.02 அமெரிக்க டாலர் என்ற ரீதியில் வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: கரோனா அச்சம் - அதிகரிக்கும் மருத்துவ காப்பீடுகள்!