மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிசம்பர் 30) சுமார் 133.14 (0.28 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 47,746.22 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 49.35 (0.35 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 13,981.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 4 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டது. அதற்கு அடுத்தப்படியாக பஜாஜ் பைனான்ஸ், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டன. அதேவேளை, மஹிந்திர, டெக் மஹிந்திரா, கோடாக் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
பிரிட்டன் நாட்டில் ஆக்போர்டு தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து, வர்த்தர்களிடையே நம்பிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக முதலீடுகள் சிறப்பாக அமைந்தன.
இதையும் படிங்க: கடன் பெறுவோருக்கு டிஜிட்டல் தளத்தை உருவாக்கிய பேங்க் ஆஃப் பரோடா