ETV Bharat / business

ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி - இந்தியப் பங்குச்சந்தை உயர்வு - நிஃப்டி

மும்பை: நிதிக் கொள்கை குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம் கண்டு வர்த்தகமாகிவருகிறது.

RBI policy outcome
RBI policy outcome
author img

By

Published : Dec 4, 2020, 1:19 PM IST

இன்று நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் தனது நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும், ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இன்றி நான்கு விழுக்காட்டிலேயே தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்றம்கண்டு வர்த்தகமானது. ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ வங்கி, எல்&டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்கண்டதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது.

தற்போது சென்செக்ஸ் 14.61 புள்ளிகள் (0.03 விழுக்காடு) அதிகரித்து 44,632.65 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 20.15 புள்ளிகள் (0.15 விழுக்காடு) உயர்ந்து 13,133.90 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் நான்கு விழுக்காடு உயர்ந்துள்ளது. அதேபோல எல்&டி, எம்&எம், மாருதி, ஓ.என்.ஜி.சி., பாரதி ஏர்டெல், பவர் கிரீட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம்கண்டு வர்த்தகமாகிவருகின்றன.

மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டு வர்த்தகமாகிவருகின்றன.

சர்வதேச முதலீட்டாளர்கள்

வியாழக்கிழமை (நவ. 03) வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 3,637.42 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

காரணம் என்ன?

இன்று காலை வெளியான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையே ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக கருப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் விரைவில் மற்றொரு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதனாலும் அவர்கள் பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்கின்றனர்.

சர்வதேச பங்குச்சந்தை
சர்வதேச அளவில் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ ஆகிய பங்குச்சந்தைகள் இறக்கத்திலும் சியோல் பங்குச்சந்தை ஏற்றம்கண்டும் வர்த்தகமாகிவருகின்றன.

கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.81 விழுக்காடு உயர்ந்து 49.59 டாலருக்கு வர்த்தகமாகிவருகிறது.

இதையும் படிங்க: 'ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை' - ரிசர்வ் வங்கி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.