கோவிட்-19 வைரஸ் தொற்று உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதனால் கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கிப்போயுள்ளன. தொழில்துறை முற்றிலும் முடங்கியிருப்பதால், உலகிலுள்ள முன்னணி பங்குச் சந்தைகள் அனைத்தும் பெரும் சரிவைச் சந்தித்துவருகின்றன.
அதற்கு இந்திய பங்குச் சந்தையும் விதிவிலக்கில்லை. இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் குறைந்து 30,245 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.8 புள்ளிகள் குறைந்து 8,866 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: நிலைதடுமாறும் உலக வர்த்தகம்: ரூ.50 ஆயிரத்தை தொடும் தங்கம்?