ETV Bharat / business

சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி, நிஃப்டி 13,452 ஆக சரிவு!

இந்திய பங்குச் சந்தைகள் தொடர் ஏறுமுகத்தில் வர்த்தகமான நிலையில் இன்று சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. நிஃப்டி 13,452 ஆக உள்ளது.

author img

By

Published : Dec 10, 2020, 11:49 AM IST

மும்பை: சர்வதேச வர்த்தகத்தில் பாதகமான சூழல் நிலவிய நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் அரை விழுக்காடு புள்ளிகள் வரை சரிவை சந்தித்துள்ளன.

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தில் உச்சம் தொட்ட நிலையில், முதலீட்டாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வியாழக்கிழமை வர்த்தகம் தொடங்கியது.

இந்நிலையில் வர்தகத்தின் தொடக்கம் முதலே பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. அந்த வகையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டு 45,780.39 ஆக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 76.55 புள்ளிகள் வீழ்ந்து 13,452.55 ஆக வர்த்தகம் காண்கிறது.

தேசிய பங்குச் சந்தையைப் பொறுத்தமட்டில் 0.57 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையைப் பொறுத்தமட்டில் 0.72 விழுக்காடு சரிந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் நெஸ்லேஇந்த், ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ்பின்சர்வ், டைடான், மாருதி, இந்துயூனிவர், பவர்கிரீட், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்வையும், டெக்ஹெச்எம், பஜாஜ் பைனான்ஸ், கோடாக் வங்கி, ஹெச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், எல்டி, பார்திஏர்டெல், ரிலையன்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐஎன், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, சன்பார்மா, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எம்எம், அல்ட்ராசெம்கோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் இறங்கு முகத்தில் காணப்பட்டன.

தேசிய பங்குச் சந்தையில் நெஸ்லேஇந்த், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஆசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா பங்குகள் ஏற்றத்தையும், யூபிஎல், ஸ்ரீசெம், அல்ட்ராசெம்கோ, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இந்த் வங்கி நிறுவன பங்குகள் வீழ்ச்சியையும் கண்டன.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் சர்வதேச வர்த்தகப் பாதிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தின. மாநில அரசு பங்குகளை விடுவித்த நிலையில், பயணச்சீட்டு (டிக்கெட்) முன்பதிவு (புக்கிங்) உள்ளிட்ட வசதிகள் வழங்கும் ஐஆர்டிசி பங்குகளும் சரிவை கண்டன.

இதையும் படிங்க: சீறிப்பாயும் இந்தியச் சந்தைகள்; வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.