ETV Bharat / business

பொருளாதார மந்தநிலை எதிரொலி: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு

author img

By

Published : Sep 3, 2019, 12:06 PM IST

மும்பை: இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.

stock

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான ஜிடிபி விகிதம் ஐந்து விழுக்காடாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் (1.1 விழுக்காடு) குறைந்து 36 ஆயிரத்து 912 புள்ளிகளுடனும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 118 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 905 புள்ளிகளுடனும் நிலைகொண்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையைப் பொறுத்துவரை, தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறையை தவிர மற்ற துறைகள் சிவப்புப் பட்டியலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொதுத் துறையின் வங்கிகளின் பங்கு மதிப்பு இரண்டு விழுக்காடும், நிதிச் சேவைத் துறை 1.4 விழுக்காடும் சரிவடைந்துள்ளன.

அதேபோன்று, இந்தியன் ஆயில் நிறுவனம் 3.4 விழுக்காடும் டாடா மோட்டார்ஸ் 2.6 விழுக்காடும் ஐசிஐசி வங்கி 2.4 விழுக்காடும் வீழ்ந்துள்ளன. இதுதவிர, பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஓஎன்ஜிசி, ஐசெர் மோட்டர்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகளும் சரிவைக் கண்டுள்ளன. எனினும், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல். டெக், டாடா கன்சல்டென்சி சர்வீஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க-சீன வர்த்தகப் போர் காரணமாக ஆசிய பங்குச் சந்தையும் தொடர்ந்து இன்றும் சரிவைக் கண்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.