கொரோனா வைரஸ் தாக்கம் உலகப் பங்குச்சந்தைகளில் தற்போது வெகுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாகப் பரவத்தொடங்கியுள்ளதால் உலகளவிலான பொருளாதாரச் சந்தையில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பொருளாதாரம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது 6 மாதங்கள் பிடிக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளையும் தற்போது ஆட்டம் கண்டுள்ளன. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலாக சரிவைக் கண்டுள்ளது.
நேற்று 39 ஆயிரத்து 595 புள்ளிகளுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் தற்போது 1,101 புள்ளிகள் சரிவுடன் 39 ஆயிரத்து 644 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், 11 ஆயிரத்து 591 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கிய நிஃப்டி 338 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 294 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இந்த சரிவு இந்திய வர்த்தகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓப்போ ஏ31 ஸ்மார்ட்போன் 11 ஆயிரத்து 490 ரூபாய்க்கு அறிமுகம்