வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 3) மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வைச் சந்தித்தது. இன்றைய வர்த்தகநாள் முடிவில் சென்செக்ஸ் 749.85 புள்ளிகள் (1.53 விழுக்காடு) உயர்ந்து வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 232.40 (1.6 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 14,682.30 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, பவர் கிரீட் நிறுவனத்தின் பங்குகள் 6.54 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக ஓ.என்.ஜி.சி., கோடாக் மஹிந்திர வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை!