ETV Bharat / business

10 லட்சம் கோடியைக் கடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு - சில்வர்லேக் நிறுவனம்

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 10 லட்சத்து 9 ஆயிரத்து 930 கோடியாக உயர்ந்துள்ளது.

RIL stocks rise, market cap crosses Rs 10 lakh cr

author img

By

Published : May 11, 2020, 1:20 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுதத்தல் காரணமாக நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. தற்போது ஊரடங்கில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் தாங்கள் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்க பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்திவருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இழந்த தங்களின் சந்தை மூலதனங்களை மீட்க சில முக்கிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவிருந்ததது.

மேலும், மே 14ஆம் தேதிக்குள் 53 ஆயிரத்து 125 கோடி ரூபாயினை மீட்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 10 லட்சத்து 9 ஆயிரத்து 930 கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தில் ஒன்றான ஜியோவில் கடந்த சில வாரங்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில், பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களான சில்வர்லேக், விஸ்டா நிறுவனங்களின் முதலீடுகளை சேர்த்ததன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு 10 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொடரும் அமெரிக்க நிறுவனங்களின் ஜியோ முதலீடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.