ஃபியூச்சர் நிறுவனத்தின் சில்லறைப் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு காம்பிடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் இவ்வாறு உயர்வைக் கண்டுள்ளன.
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.23) மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் மூன்று விழுக்காட்டுக்கும் உயர்ந்து உச்சத்தைத் தொட்டது. அதேபோல் ஃபியூச்சர் நிறுவனத்தின் பங்குகளும் சுமார் பத்து விழுக்காடு உயர்வைக் கண்டது.
சில்லறை, மொத்த விற்பனை, லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுஸ் உள்ளிட்ட துறைகளில் நாட்டின் முன்னணி நிறுவனமாக ஃபியூச்சர் இந்தியா விளங்குகிறது.
முன்னதாக ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமேசான் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு அமேசான் தடை கேட்டு வந்த நிலையில் காம்பிடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.