மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததைவிட 467 புள்ளிகள் அதிகமாகத் தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 87.7 புள்ளிகள் உயர்ந்து 31,653 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
அதேபோல தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.6 புள்ளிகள் உயர்ந்து 9,299 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் நான்கு விழுக்காடும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடு உயர்ந்துள்ளன. அதேபோல கோடாக் வங்கி, டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல். டெக்., டி.சி.எஸ். ஆகியவற்றின் பங்குகளும் ஏற்றத்தில் தொடங்கின.
அதேபோல ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், என்.டி.பி.சி., இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
சர்வதேச அளவில் ஷாங்காய், ஹாங்காங், சியோல் ஆகிய பங்குச்சந்தை ஏறுமுகத்திலும் டோக்கியோ பங்குச்சந்தை இறங்குமுகத்திலும் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.
ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 0.85 விழுக்காடு குறைந்து 27.84 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: சம்பளம் இல்லாத விடுப்பு எடுக்க ஊழியர்களுக்கு விமான நிறுவனம் அறிவுறுத்தல்!