ETV Bharat / business

பங்குச்சந்தை நிலவரம்: 35 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் - மும்பை பங்குச் சந்தை

ஒரு புறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சந்தித்துவரும் போதும், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது.

Sensex
Sensex
author img

By

Published : Jun 23, 2020, 6:24 PM IST

இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே, மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 519.11 புள்ளிகள் (1.49 விழுக்காடு) அதிகரித்து 35,430.43 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.80 புள்ளிகள் (1.55 விழுக்காடு) அதிகரித்து 10,347.95 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

பஜாஜ் பைனான்ஸ், எல்&எல் நிறுவனம், இண்டஸ்இண்ட் வங்கி, என்.டி.பி.எல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. மறுபுறம் ரிலையன்ஸ், பாரத் ஏர்டெல், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 பைசா குறைந்து 75.66 ரூபாய்க்கு வர்த்தகமானது.

35 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

கச்சா எண்ணெய் விலை:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 1.37 விழுக்காடு உயர்ந்து, பேரல் ஒன்று 43.67 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய ஐஓஎஸ் 14 வெர்ஷன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.