சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப்பின் பங்குச்சந்தை வர்த்தகமானது இன்று காலை தொடங்கியது. பொருளாதார மந்தநிலை சிக்கல் நாட்டில் நிலவிவரும் நிலையில், அதை சீர்செய்ய மத்திய அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். கடந்த சனிக்கிழமையன்று மூன்றாவது முறையாக எடுக்கப்படும் சீர்த்திருத்த நடவடிக்கை குறித்து செய்தியாளார்களிடம் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு வர்த்தகர்களிடம் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் பெரும் சரிவுடனே தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 32 ஆயிரத்து 150 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 11 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
இந்தச் சரிவு தற்காலிகமாக கானப்படும் எனவும், மதியத்துக்குமேல் சீராகி பங்குச்சந்தை உயர்வுபெறும் என்றும் பங்குச்சந்தை வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.