ETV Bharat / business

புதிய உச்சத்தை தொடும் இந்திய பங்குச்சந்தை - சர்வதேச பங்குச்சந்தை

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 45,728 புள்ளிகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Market
Market
author img

By

Published : Dec 8, 2020, 11:18 AM IST

கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான செய்திகள் வெளியான தொடங்கியதில் இருந்தே, இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்கண்டு வர்த்தகமாகிவருகின்றன.

இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 250 புள்ளிகள் உயர்ந்து 45,682 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கியது. சென்செக்ஸ் தற்போது 283.07 புள்ளிகள் உயர்ந்து, 45,710.04 புள்ளிகளில் வர்த்தமாகிவருகிறது.

அதேபோல, 13,393 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கிய தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, தற்போது 140.95 புள்ளிகள் உயர்ந்து 13,533 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக மாருதி நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடு ஏற்றம்கண்டது. அதேபோல பஜாஜ் ஆட்டோ, எம்&எம், ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி., ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்கண்டன.

மறுபுறம், டெக் மஹேந்திரா, சன் பார்மா, இண்டஸ்இண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

அந்நிய முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை வர்த்தகத்தின்போது சுமார் ரூ. 3,192 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கியுள்ளனர்.

காரணம் என்ன?

இது குறித்து ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸின் வியூகப் பிரிவின் தலைவர் பினோத் மோடி கூறுகையில், "அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடுகளும், மற்றொரு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளதால் பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றம்கண்டு வர்த்கமாகிறது" என்றார்.

சர்வதேச பங்குச்சந்தை

ஷாங்காய், ஹாங் காங், சியோல், டோக்கியோ ஆகிய பங்குச் சந்தைகள் தற்போது சரிவைக் கண்டு வர்த்தகமாகிவருகின்றன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.82 விழுக்காடு குறைந்து 49.93 டாலருக்கு வர்த்தகமாகிறது.

இதையும் படிங்க: காபி டே சிஇஓ பொறுப்புக்கு சித்தார்த் மனைவி மாளவிகா தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.