ETV Bharat / business

இரண்டே நாளில் பங்குச்சந்தை சரிவால் 9.74 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்! - பங்குச்சந்தை சரிவால் 9.74 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்

மும்பை: கரோனா வைரஸ், யெஸ் வங்கி விவகாரம் என இந்தியப் பங்குச்சந்தை சரிவைச் சந்திக்கும் நிலையில் இரண்டே நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு 9,74,176.71 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Stock Market
Stock Market
author img

By

Published : Mar 18, 2020, 12:00 AM IST

இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. மேலும் வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தக முடிவின்போது, சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவைச் சந்தித்தன.

அந்தச் சரிவு இன்றும் தொடர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு 9.74 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேர்ந்துள்ளது. முக்கிய நிறுவன பங்குகள் அனைத்தும் சரிந்துள்ளதைத் தொடர்ந்து, 539 நிறுவனப்பங்குகள் ஒரு வருடம் கண்டிராதச் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 1,650 நிறுவனப்பங்குகள் சரிவையும், 779 நிறுவனப் பங்குகள் உயர்வையும் சந்தித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து 166 நிறுவனப் பங்குகள் எந்ததொரு மாற்றமுமின்றி வர்த்தகமாகியுள்ளன. நாளுக்கு நாள் இந்தியப் பங்குச்சந்தை ஆட்டம் காணும் நிலையில், நாளை தொடங்கவிருக்கும் வணிகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சிப்பெறுமா என்ற கேள்வி பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், பங்குத்தரகர்கள் இடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 90 நொடிகளில் காலியான ரெட்மியின் சரவெடி ஸ்மார்ட்போன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.