மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மே.17) சுமார் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. இன்றைய வர்த்தகநாள் முடிவில் சென்செக்ஸ் 1,687.94 புள்ளிகள் (2.87 விழுக்காடு) சரிந்து 57,107.15 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 509.80 (2.91 விழுக்காடு) புள்ளிகள் சரிந்து 17,029.45 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு, ஆப்ரிக்க நாடுகளில் உருவாகிய உருமாறிய கரோனா போன்ற காரணங்களால் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் சுமார் 4.50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு கண்டுள்ளனர்.
கோவிட் குறித்தான அச்சம் மீண்டும் முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, டாடா ஸ்டீல், எச்டிஎப்சி, இன்டஸ்இன்ட் வங்கி, மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: Covid 19 new variant: உலக நாடுகளை மிரட்டும் புதுவகை கரோனா; இந்தியாவிலும் உஷார்நிலை