இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது எனப் பல பேர் பேசிவரும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரும் பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய பாஜக அரசு இந்தியப் பொருளாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவித்த அவர், அரசியல், சமூக செயல் என செயல்பட்டுவருவதாகவும் கூறினார். அரசியலில் எப்படி வெற்றிபெறலாம் என்பதை அதிகம் சிந்திக்காமல், பொருளாதாரத்தை மீட்கும் வழிகளைக் கண்டுபிடித்தால் மட்டுமே இந்தியப் பொருளாதாரம் மேம்படும் எனவும் பேசியுள்ளார்.
இந்தியப் பொருளாதாரச் சரிவால், சிறு நிறுவனம் முதல் பெரு நிறுவனம் வரை அனைத்தும் சரிவை சந்தித்துவருகிறது. இதனை பாஜக அரசு விரைவில் சரிசெய்ய விலை என்றால் மிகப்பெரிய விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 3ஆம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவிகிதம்