மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஏப்.5) 870.51 புள்ளிகள் (1.74 விழுக்காடு) சரிந்து 49,159.32 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 229.55 புள்ளிகள் (1.54 விழுக்காடு) சரிந்து 14,867 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை மீண்டும் தீவிரமடைந்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இதன் தாக்கம் சந்தையில் எதிரொலித்ததே இந்த சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஏற்றம்- இறக்கம் கண்ட பங்குகள்
- ஹெச்.சி.எல்., டி.சி.எஸ்., இன்போஸிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
- அதேவேளை பஜாஜ் பைனான்ஸ், இன்டஸ்இன்ட், பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: ஆப்பிள் ஆர்கேட்டில் 180க்கும் அதிகமான கேம்ஸ் அறிமுகம்