மத்திய அரசு நிதிநிலை அறிக்கைக்கு பின் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஆட்டோமொபைல், வங்கி துறைகள் தொடர் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஸ்டி வரிக்குறைப்பு, வங்கிகளுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த வங்கி பங்குகள் உயர்வை சந்தித்தன. வங்கி பங்குகளில் மீண்டும் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் முன்வந்த நிலையில், மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
அதன்ப்படி எஸ் வங்கி (Yes Bank) 15 விழுக்காடு, ஆர்பிஎள் வங்கி (RBL Bank) 7 விழுக்காடு சரிவை சந்தித்தன. மேலும் இண்டஸ் வங்கி (IndusInd Bank) 6 விழுக்காடு, டிசிபி வங்கி (DCB Bank) 3.46 விழுக்காடு, ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) 2.45 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செஸ் 284 புள்ளிகள் குறைந்து 38,538 என முடிவடைந்த நிலையில், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி50 (NIFTY50) 14 பங்குகள் சிறப்பாகவும், 36 பங்குகள் வீழ்ச்சியிலும் முடிவடைந்தது.
இதையும் படிங்க:செப்டம்பரில் வெளிநாட்டு முதலீடு ரூ.7¸714 கோடியாக அதிகரிப்பு!