டெல்லி: மாருதி சுசுகி, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜூலை மாதம் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் மறுபுறம் எம்ஜி மோட்டார் இந்தியா தனது விற்பனை 40 விழுக்காடு அதிகரித்து சாதனைப் படைத்துள்ளது.
மாருதி சுசுகியின் மொத்த விற்பனை ஜூலை மாதத்தில் 1.1% சரிவு
ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி ஜூலை 2020இல் மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 1.1 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் ஆண்டு மொத்த விற்பனையின் கணக்குப்படி 2019 ஜூலை மாதத்தில் விற்கப்பட்ட 1,09,264 வாகனங்களிலிருந்து 1,08,064 வாகனங்களாகக் குறைந்துள்ளது. மொத்த விற்பனையில் உள்நாட்டு சந்தையில் 1,00,000 வாகனங்களும், பிறவற்றுக்கு கொடுக்கப்பட்ட 1,307 வாகனங்களும் அடங்கும்.
மாருதி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் ஏற்றுமதியானது 2019 ஜூலை மாதத்தில் அனுப்பப்பட்ட 9,258 வாகனங்களிலிருந்து 6,757 வாகனங்களாக ஜூலை 2020-இல் சரிந்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா 2020 ஜூலை மாதத்தில் மொத்தம் 1,08,064 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 ஜூன் மாதத்தை விட 88.2 விழுக்காடு வளர்ச்சியும், ஜூலை 2019ஐ விட 1.1 விழுக்காடு சரிவும் ஆகும்.
ஜூலை மாதத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா விற்பனை 28% குறைந்துள்ளது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஜூலை மாதத்தில் மொத்த விற்பனையில் 28 விழுக்காடு சரிந்து 41,300 ஆக இருந்தது. 2019இன் இதே மாதத்தில் நிறுவனம் 57,310 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் ஜூலை மாதத்தின் உள்நாட்டு விற்பனை 38,200ஆக இருந்தது. இதுவே 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 39,010ஆக இருந்தது. இது 2 விழுக்காடு சரிவாகும். ஏற்றுமதியை பொறுத்தவரையில் 83 விழுக்காடு குறைந்து 3,100 வாகனங்களாக இருந்தது. இதே 2019ஆம் ஆண்டில் 18,300 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
ஜூலை மாதம் மஹிந்திரா விற்பனை 36% சரிவு
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம் அண்ட் எம்) ஜூலை மாதத்தில் மொத்த விற்பனையில் 36 விழுக்காடு சரிவைக் கண்டு 25,678ஆக இருந்தது. 2019ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 40,142 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாக எம் அண்ட் எம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தையில், 2019 ஜூலை மாதம் 37,474 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனை ஒப்பிடுகையில் 2020இல் 35 விழுக்காடு விற்பனைக் குறைந்து 24,211ஆக இருந்தது. ஏற்றுமதி 45 விழுக்காடு குறைந்து 1,467 வாகனங்களாக இருந்தது. இதே முந்தைய காலக்கட்டத்தில் 2,668ஆக இருந்தது.
பயணிகள் வாகனங்கள் பிரிவில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 11,025 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே 2019ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 16,831 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 34 விழுக்காடு குறைவாகும். வணிக வாகனங்கள் பிரிவில், மஹிந்திரா 13,103 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே 2019இல் 15,969 வாகனங்களை விற்றிருந்தது. ஒப்பீட்டளவில் இது 18 விழுக்காடு சரிவாகும்.
11 மாதங்களில் ஒரு லட்சம் கார்களை விற்ற கியா மோட்டார்ஸ்!
டொயோட்டா கிர்லோஸ்கர் விற்பனை 48% குறைந்துள்ளது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டி.கே.எம்) உள்நாட்டு வாகன விற்பனையில் ஜூலை மாதத்தில் 58,386ஆக 48.32 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது. இதே 2019ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 10,423ஆக இருந்தது. இந்நிறுவனம் ஜூன் மாதத்தில் உள்நாட்டு விற்பனையை 3,866 வாகனங்களை விற்றுள்ளது.
எம்.ஜி மோட்டார் விற்பனை ஜூலை மாதத்தில் 40% அதிகரிப்பு
எம்ஜி மோட்டார் இந்தியா வாகனங்களின் சிற்பனை ஜூலை மாதத்தில் 40 விழுக்காடு அதிகரித்து 2,105ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,508 வாகனங்களை விற்றிருந்தது.