சனி, ஞாயிற்றுக்குப் பிறகு மும்பையில் நடந்த தேர்தல் வாக்குப்பதிவால், அனைத்து வித பங்கு முகமைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், சிறு குறு முதலீட்டின் ஏற்றத்தாழ்வுகள் என அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் பிரதிபலிக்கும் எனக் கூறுகின்றனர் பங்கு வர்த்தக நிபுணர்கள்.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336 புள்ளிகள் உயர்ந்து 39,067 புள்ளிகளாக இருந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112 புள்ளிகள் உயர்ந்து 11,754 புள்ளிகளாக இருந்தன.