ETV Bharat / business

வருமான வரிச் சட்டத்தில் புதிய சாசனம் அறிமுகப்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன் - மத்திய நிதி அமைச்சர்

வரி செலுத்துவோருக்கு உரிமை வழங்கும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் புதிய சாசனம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்துவோரின் உரிமைகள், பொறுப்புகள் அடங்கிய புதிய சாசனம் அவர்கள் நியாயமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
author img

By

Published : Aug 8, 2020, 3:48 PM IST

டெல்லி: வரி செலுத்துவோருக்கு உரிமை வழங்கும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் புதிய சாசனம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நேர்மையாக வருமான வரி செலுத்துவோரை தேவையில்லாத தொந்தரவுகளுக்கு ஆளாக்காமல் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெகு சில நாடுகளில் மட்டுமே வருமான வரி செலுத்துவோருக்காக பிரத்யேக சாசனங்கள் இருக்கின்றன.

ஷேர் சாட் செயலியில், 750 கோடி முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய சாசனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற காணொலி காட்சி உரையாடலில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வருமான வரி ஆய்வுகளை அண்மை ஆண்டுகளில் மத்திய அரசு குறைத்துள்ளது. வருமான வரித் தாக்கல் செய்வோரில் 0.25 விழுக்காடு பேர் குறித்த விவரங்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

வருமான வரி செலுத்துவோர் முதலில் நேர்மையை நிரூபிக்கும்படி கேட்காமல், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதே நமது திட்டம். வாழ்வையும், தொழிலையும் எளிதாக்குவதற்கு நியாயம் முக்கியம். வரித் துறை நியாயமாக நடந்துகொள்கிறது என தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.

10 கோடி தடுப்பூசிகளை மலிவு விலையில் தயார் செய்யவுள்ள இந்திய நிறுவனம்

இதற்காக வரி செலுத்துவோருக்கென தனி சாசனத்தை சட்டத்தில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். வரி செலுத்துவோர் தொந்தரவு செய்யப்படமாட்டார்கள் என எங்கள் அரசு உறுதியளிக்கிறது. வரி செலுத்துவோர் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவதை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.