நீண்ட நாட்களாகவே தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடோஃபோன் கடும் பொருளாதார நஷ்டங்களைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கரோனா பாதிப்பால், தங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கோபால் விட்டல், 'நாளுக்கு நாள் பொருளாதார சரிவு உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே, தற்போது வழங்கி வரும் சேவைத் தொகையில் மாற்றம் வரும்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாதம் ஒன்றிற்கு 154 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்பவர்கள், இனி 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய நேரிடும் என்றும்; 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்பவர்கள் 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யவேண்டும் எனவும் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘புலம்பெயர்ந்தோரின் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’ - பிரியங்கா காந்தி