ETV Bharat / business

நிதித்துறையில் கோலோச்சிய தமிழர்கள் - Finance ministers

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முகம் செட்டியார் தொடங்கி தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை மத்திய நிதித்துறையில் தமிழர்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளனர்.

FIN
author img

By

Published : Jul 2, 2019, 10:40 AM IST

Updated : Jul 4, 2019, 8:37 AM IST

சுதந்திர இந்தியாவில் இதுவரை 28 பேர் நிதியமைச்சர்களாக இருந்துள்ளனர். இந்த 28 பேரில் ஆறு பேர் தமிழர்கள். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு மத்திய நிதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முகம் செட்டியார் என்ற பெருமை தொடங்கி, தற்போது நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் நாட்டின் முதல் பெண் (முழு நேர) நிதியமைச்சர் என்று பல்வேறு பெருமைகளுக்குத் தமிழர்கள் சொந்தக்காரர்களாக உள்ளனர்.

RKS
ஆர்.கே சண்முகம் செட்டியார்

அத்துடன், ஐக்கிய முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் நேரு, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக டி.டி. கிருஷ்ணமாச்சாரி 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

PC
ப.சிதம்பரம்

நிதிநிலை அறிக்கைத் தாக்கலுக்கு முந்தைய நாள் நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை (Economic survey) வெளியிடப்படும். வரப்போகும் பட்ஜெட்டில் இந்த ஆய்வறிக்கையை எழுதும் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகரான கே. சுப்ரமணியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

KS
கே. சுப்ரமணியன் ட்விட்டர் பதிவு

மத்திய நிதியமைச்சர்களாகப் பதவி வகித்த தமிழர்கள்:

  • ஆர்.கே. சண்முகம் செட்டியார்
  • டி.டி. கிருஷ்ணமாச்சாரி
  • சி. சுப்ரமணியம்
  • ஆர். வெங்கட்ராமன்
  • ப. சிதம்பரம்
  • நிர்மலா சீதாராமன்

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 4, 2019, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.